மக்களின் ஆதரவும் சர்வதேச ஒத்துழைப்பும் எனக்கு உண்டு - போராட்டங்கள் வீண் - ரணில்!
நாட்டு மக்களின் ஆதரவு தற்போது எனக்கு கிடைத்துள்ளதுடன், சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாணயநிதியத்தின் நிதிப்பங்களிப்பும் கிடைத்துள்ளது, ஆகவே தொழிற்சங்க போராட்டங்களின் மூலம் எதையும் செய்து விட முடியாது.
இதை சம்பந்தப்பட்டவர்கள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு, தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
போராட்டங்கள் வீண்
மேலும் அவர்,
"சர்வதேச நாடுகளிடமும், சர்வதேச அமைப்புகளிடமும் பெறுகின்ற - செலுத்துகின்ற கடன்களுக்கு வரி விதிப்பு மிக முக்கியமான ஒன்று.
இதை தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
எதிர்க்கட்சியினரைப் போல் தொழிற்சங்கத்தினரும் பிளவுபட்டுள்ளனர், அவர்களில் ஒரு தரப்பினர் தமது சுயலாபத்திற்காக இவ்வாறான போராட்டங்களின் மூலம் மிரட்டல் விடுகின்றனர்.
இதன் மூலம் அவர்களால் எதையும் சாதித்துவிட முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்." இவ்வாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
