எனக்கு அமைச்சு பதவி வேண்டாம் - சலுகைகளை மறுக்கும் நாமல்
Namal Rajapaksa
Ranil Wickremesinghe
By pavan
நிர்வாகத்தினால் எடுக்கப்படும் சில கொள்கைத் தீர்மானங்களை தாம் ஏற்றுக்கொள்ளாததால், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், இவ்வாறான சூழ்நிலையில் ஒரு சலுகைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்
அதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அடுத்த அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தேர்தலுக்கு அருகில் அறிவிக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் அதிபராகவும் நியமிக்கப்பட்டமை எவ்வாறு எதிர்பாராததோ அதேபோன்று எதிர்காலத்தில் எதுவும் சாத்தியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்