அரசியல் கைதிகளின் விடுதலை தாமதமாகும் - தமிழ் அரசியல்வாதிகளே காரணம்!
"தமிழ் அரசியல் கைதிகளை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை மேலும் பாதிக்கும்."
இவ்வாறு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலையை பாதிக்கும்
தொடர்ந்து அவர்,
"தமிழ் அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் 29 தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரமே உள்ளனர், அதிபரின் பொது மன்னிப்பின் ஊடாகவும், ஏனையவர்களை சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய நீதிமன்றத்தின் ஊடாகவும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வேதனைகள் எமக்கு நன்கு தெரியும், அவர்களின் கண்ணீரில் தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் நாடகம் நடத்துகின்றனர், இது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை மேலும் தாமதப்படுத்தலாம்." என அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.