ரணில் கைதை முன்னரே கூறிய யூடியூப்பருக்கு விழுந்த பேரிடி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு முன்னர் யூடியூபர் சுதத்த திலகசிறி வெளியிட்ட கருத்து குறித்து சிறப்பு காவல்துறை புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று சுதத்த திலக்சிறி கடந்த வெள்ளிக்கிழமை தனது யூடியூப் தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சிறப்பு புலனாய்வுப் பிரிவு
இந்தநிலையில் இது குறித்து விசாரணை நடத்தக் கோரி ஐக்கிய தேசியக் கட்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை செய்துள்ளது.
இந்தநிலையிலேயே சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் ஆரம்பிக்கும் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி நாட்டின் பொதுப் பணத்தை குற்றவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார் .
நேற்று முன்தினம் (22) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரது தீர்ப்பு அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 10 மணி நேரம் முன்
