செம்மணியில் துரத்தியடிக்கப்பட்ட அரசியல் தலைமைகள்: யாழ் மக்கள் புகட்டிய பாடம்
செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை அரசியல் ஆயுதமாக மாற்றி, தமிழ் மக்களின் உணர்வுகளை சுரண்ட முயன்ற அரசியல் தலைவர்கள், அணையா விளக்கு போராட்டத்தில் எதிர்பாராத கடும் எதிர்ப்புக்கு ஆளாகி மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் தற்போதைய தமிழ் சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வை உறுதிப்படுத்தியுள்ளது.
அண்மையில் யாழ் (Jaffna), செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட மக்களுக்காக நீதி கோரி அணையா விளக்கு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ள முற்ப்பட்ட சில அரசியல் தலைமைகளை மக்கள் ஆதங்கத்துடன் விரட்டியடித்திருந்த நிலையில், அது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அதில், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இளங்குமரன், ரஜீவன், தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் என அணைவரும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
நீண்ட காலமாக அரசியல் சொந்த பலத்தை பெருக்க மக்களின் உணர்வுகளை வேடிக்கையாக்கிய நிலையையை முறியடிக்க மக்கள் எடுத்த இந்த அவதாரம் அவர்களுக்கு எதிர்பார்க்காத ஒரு விடயமாகவும் பாரிய அச்சத்தை தரக்கூடிய விடயமாகவும் உருவெடுத்திருந்திருந்தது.
இவ்வாறு மக்களால் துரத்தப்படும் அளவிற்கு இவர்கள் மேற்கொண்ட அரசியல், செம்மணி விவகாரத்தில் அரசியல் தலைமைகளின் பிண்ணனி, தமிழ் தலைமைகள் மற்றும் அநுர தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்பன தொடர்பில் மக்கள் போராட்ட முன்ணனியின் தேசிய நிறைவேற்ற குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய நேருக்கு நேர் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
