மீண்டும் கைவரிசையை காட்டும் அரசியல்வாதிகள் - அரசுக்கு ஏற்பட்ட பில்லியன் கணக்கான இழப்பு
நாட்டிற்கு சரியான அரச தலைவர் இருந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் கடந்த அரசாங்கங்களில் செய்தது போன்று மீண்டும் மோசடி மற்றும் ஊழல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தற்காலிக அதிவேக பாதை அனுமதிப்பத்திரம் வழங்குவதில் அரசியல்வாதிகள் பலர் ஈடுபட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அரசியல்வாதிகளின் ஊழல்
“அரசியல்வாதிகளின் சில தொடர்புகளுடன் கிட்டத்தட்ட 35 அதிவேக பாதை அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன,” என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த தற்காலிக அதிவேக நெடுஞ்சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதால், அரசுக்கு ரூ. 3,000 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தற்காலிக அதிவேக நெடுஞ்சாலை அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு அரசியல்வாதியும் மோசடி செய்கிறார்கள். தற்போது 100 பேருந்துகள் இந்த தற்காலிக அனுமதிப்பத்திரத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுவதாக விஜேரத்ன தெரிவித்தார்.
தாறுமாறான வழித்தட அனுமதி
கேள்வி நடைமுறையைப் பின்பற்றி வழித்தட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார், கேள்வி நடைமுறையின் மூலம் பெறப்பட்ட வழித்தட அனுமதியுடன் விரைவுச் சாலையில் கிட்டத்தட்ட 10 பேருந்துகள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள பேருந்துகள் தற்காலிக ரூட் பெர்மிட் மூலம் இயக்கப்படுகின்றன,'' என்றார்
