கனடா செல்ல ஆசை காட்டிய கும்பல்! மூன்று இலங்கை தமிழர்கள் உட்பட அறுவரை வலைவீசித் தேடும் இந்திய காவல்துறை

india investigation canada Tamil Nadu pondicherry Trichy SriLankan
By Chanakyan Dec 31, 2021 11:34 AM GMT
Report

கனடாவில் குடியுரிமை மற்றும் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மதபோதகர், இலங்கை தமிழர் மூன்றுபேர் உட்பட 6 பேர் மீது இந்திய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுச்சேரியை சேர்ந்த ஸ்டீபன் நித்தியானந்தம் என்பவர் திருக்கனுாரில் மத போதகராக உள்ளார்.

இவருக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு, புதுச்சேரி வெண்ணிலா நகரைச் சேர்ந்த மதபோதகர் ஜான்சன் சகாயதாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்துார் வடவள்ளி, 3வது குறுக்கு தெருவில் வசிப்பவர், இலங்கையைச் சேர்ந்த ரமணி.

இவர், கனடா நாட்டில் தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ,) நடத்தி வருவதாகவும், ஏழை மக்களை கனடாவுக்கு அனுப்பி, அங்கு குடியுரிமை, வேலை வாங்கித் தருவதாகவும் நித்யானந்தத்திடம் ஜான்சன் கூறினார். மேலும், இதற்கு ஒரு நபருக்கு ரூ. 10 லட்சம் செலவாகும்.

முதல்கட்டமாக ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும். மீதி பணம் கனடா நாட்டிற்கு சென்ற பின்பு, அங்கு வேலை செய்யும்போது மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்வர்' என, கூறினார்.

இதை நம்பிய ஸ்டீபன் நித்தியானந்தம் மற்றும் தேவாலையத்தில் உறுப்பினராக உள்ள 14 பேர், தலா ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 15 லட்சத்தை, என்.ஜி.ஓ., பணியாளரான சென்னை அடையாறு மத போதகர் சைமன் ஜோஸ்வாவிடம் கொடுத்தனர். கனடாவுக்கு செல்வது எப்படி என ஒரு கூட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற 165 பேர் கனடா செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

கனடா செல்ல விரும்பியவர்கள், ரூ.1.65 கோடியை, சென்னையில் வசிக்கும் இலங்கை தமிழர் நிக்கோலஸ் செல்வக்குமார், ரமணி மகள் கிருஷ்யாணி, திருச்சியை சேர்ந்த சாரதி தமிழ்செல்வன் ஆகியோரது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளனர்.

ஆனால் கனடா நாட்டிற்கு யாரையும் அனுப்பவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, பணத்தை பெற்று தருமாறு நித்தியானந்தத்திடம் கேட்டனர். அவர், ஜான்சனிடம் கேட்டபோது, சரியான பதில் கூறவில்லை.

ரமணியை மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது எடுக்கவில்லை. இது தொடர்பாக நித்தியானந்தம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையில் புகார் அளித்தார்.

அதன்பேரில், பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் ரமணி, நிக்கோலஸ் செல்வகுமார், கிருஷ்யாணி, மத போதகர் ஜான்சன், சைமன் ஜோஸ்வா, சாரதி தமிழ்செல்வன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்திய காவல்துறையினர் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025