பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் - நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
Colombo
Grenade
SriLanka
Porla Church
Suspect released
By MKkamshan
பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த தேவாலயத்தில் பணியாற்றிவந்த “முனி” என்ற நபரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 11ஆம் திகதி பொரளையில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
