கிளிநொச்சி சேரன் திரையரங்கில் ''போராட்டம்'' திரைப்பட சிறப்புக்காட்சி!
IBC Tamil
Kilinochchi
Porattam
By Independent Writer
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ''போராட்டம்'' திரைப்படத்தின் சிறப்புக்காட்சி கிளிநொச்சி - சேரன் திரையரங்கில் இன்று திரையிடப்படவுள்ளது.
இன்று (27) மாலை 06.30 மணியளவில் ''போராட்டம்'' திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை சேரன் திரையரங்கின் பெரிய திரையில் நீங்கள் கண்டுகழிக்கலாம்.
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
கந்தையா பாஸ்கரனின் தயாரிப்பில் உருவான “போராட்டம்“ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
இந்தநிலையில் ''போராட்டம்'' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி திரைப்படம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |