ஈழ சினிமாவின் புதிய திருப்புமுனையாக வெளிவரவுள்ள போராட்டம் திரைப்படம்
ராஜ் சிவராஜின் இயக்கத்தில் பாஸ்கரன் றீகனின் நடிப்பில் வெளியாகியகவுள்ள போராட்டம் திரைப்படம் ஈழ சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்
இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் குறித்த போராட்டம் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக பாஸ்கரன் றீகன் நடிக்கவுள்ள நிலையில் ஐபிசி தமிழ், பாஸ்கரன் கந்தையா (Baskaran Kandiah) தயாரிப்பில் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிசி (IBC) தமிழின் முழுநீளத்திரைப்படமொன்று விரைவில் வெளியாகவுள்ளது. ஐபிசி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது திரைப்படமாக இந்த திரைப்படம் அமைகின்றது.
படக்குழு வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில் கதாநாயகன் பாஸ்கரன் றீகன் உதைப்பந்தாட்ட வீரராக காட்சியளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது...