பொரள்ள தேவாலய கைக்குண்டு விவகாரம்! கொழும்பு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
Release
Colombo
Grenade
SriLanka
Porla Church
By Chanakyan
பொரள்ள தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேவாலய ஊழியர் உட்பட மூவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான வைத்தியர் தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த தேவாலயத்தின் நான்கு ஊழியர்களில் மூவரே இவ்வாறு கொழும்பு மேலதிக நீதிவானின் உத்தரவுக்கமைய விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கமைய குறித்த சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
