தமிழரசுக் கட்சிக்குள் அதிரடி மாற்றங்கள் : தலைவர் பொறுப்பிலிருந்து தூக்கப்பட்ட மாவை
By Shalini Balachandran
தமிரழசுக் கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா செயற்படுவார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்தின் இடைவெளியின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் மாவை கட்சி தலைமை பொறுப்பை எடுத்த போது சம்பந்தனை நாங்கள் அரசியல் குழு தலைவராக நியமித்திருந்தோம்.
இதனடிப்படையில், தற்போது எஞ்சிய காலத்திற்கு சி.வி.கே சிவஞானம் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அரசியல் குழு தலைவராக மாவை செயற்படுவார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
2 வாரங்கள் முன்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்