தொடரும் நெருக்கடி!! சேவையை மட்டுப்படுத்தியது மற்றுமோர் அரச திணைக்களம்
நாடளாவிய ரீதியில் தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் ஊடாக எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பொதுச் சேவைகள் மேற்கொள்ளப்படும் என என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கம்
இதேவேளை, தபால் திணைக்களத்தின் இந்த திடீர் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி அவசர பணிப்பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தபால் அலுவலகங்களை திறப்பதால், சனிக்கிழமை கொடுப்பனவு உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகளை அஞ்சல் நிர்வாகம் குறைத்து வருவதால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
