மோடிக்கு எதிராக சுவரொட்டி: காவல்துறையிடம் சிக்கிய இருவர்!
பிலியந்தலை காவல்துறை பிரிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) எதிராக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களையும் பல சுவரொட்டிகளையும் காவல்துறையினர் கைபற்றி உள்ளனர்.
இந்தியப் பிரதமரின் வருகைக்கும், கையெழுத்தாகும் ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த இளைஞர்களை கைது செய்யவில்லை என்றும் அனைத்து சுவரொட்டிகளும் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் நடவடிக்கை
இதேவேளை, ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த அனைத்து சுவரொட்டிகளையும் அகற்றவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தரவிருக்கிறார்.
அதன்போது, எரிசக்தி டிஜிட்டல் மயமாக்கல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்