வருட ஆரம்பத்திலேயே இருளில் மூழ்கவுள்ள நாடு - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு, போதிய நிலக்கரி இன்மையாலேயே இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அனல் மின்நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையினாலும், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நீர்த்தேக்கங்களில் நீர் கொள்ளளவு குறைந்ததாலும், நீர்மின் நிலைய பகுதிகளில் மழையின்மையினாலும், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

அதேவேளை தேவையான அளவு நிலக்கரி கிடைக்காவிட்டாலும் ஜனவரி முதலாம் திகதி முதல் நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், நாட்டின் தேசிய தேவைகளில் கிட்டத்தட்ட பாதியளவு மின்சாரத்தை நுரைச்சோலை அனல் மின்நிலையம் உற்பத்தி செய்கின்றது.
இருந்த போதும் ஏற்கனவே கோரப்பட்ட விலைமனுவிற்கு அமைய 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுவரை 5 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல்

இதற்கு முன்னர் நிலக்கரியை கொண்டுவருவதற்கான விலைமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, வேறு முறைமையின் மூலம் மேலும் மேலும் 12 நிலக்கரி கப்பல்களை நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
3 நிலக்கரி கப்பல்கள் மூலம் 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
மேலும் 28 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர தயாராகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்