அடுத்த 3 நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு
Power cut Sri Lanka
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
Minister of Energy and Power
By pavan
நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜனவரி 2 ஆம் திகதி 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்வெட்டு நடைமுறை

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
