வெளிநாடொன்றை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்...! அதிகரிக்கும் உயிரிழப்பு - அச்சத்தில் மக்கள்
புதிய இணைப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ள தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் - இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் இன்று (3) அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்நிலையில் குறித்த நில நடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் 320 பேர் காயமடைந்துள்ளனர். சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம் காணப்படுவதாக கூறப்படுகின்றது
முதலாம் இணைப்பு
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நிலநடுக்கம் இன்று (03.11.2025) அதிகாலை 12:59 மணிக்கு (20:29 GMT) மணியளவில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிர்ந்த கட்டிடங்கள்
அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த நிலையில், அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |