வடக்கில் இன்று பகல் முழுவதும் மின்தடை
வடக்கு மாகாணத்தின் மன்னார் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் தற்போது மின் தடை நடைமுறையில் உள்ளதாக இலங்கை மின்சாரசபை (CEB) தெரிவித்துள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை 13 மணி நேரம் மின் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா - மன்னார் 220 கிலோவாட் மின் பரிமாற்ற வடத்தை மாற்றியமைப்பதற்கான வேலைகளுக்காகவே மின் துண்டிக்கப்பட்டதால், நான்கு மாவட்டங்கள் முழுவதும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மின்சாரம் வழங்கப்படும்
குறித்த வேலைகள் நிறைவடைந்ததும் மின் இணைப்பு உடனடியாக மீள வழங்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை எதிர்பார்த்ததை விட வேலை முன்னதாகவே முடிந்தால், திட்டமிடப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே மின்சாரம் வழங்கப்படும் எனவும் மின்சாரசபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்