மின்வெட்டு தொடர்பில் மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு
வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இலங்கை மின்சார சபை (CEB) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) அதிகாலை நிலவரப்படி நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதுவரை 56 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டில் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேசங்களில் மின் தடைகள் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில், தொடர்ச்சியாக மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான சீரற்ற காலநிலை காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.