தமிழர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த குண்டு (படம்)
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Final War
By Kiruththikan
கிளிநொச்சி- தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமியில் விழுந்த சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்தி வாய்ந்த விமானக் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
யுத்தக்காலத்தில் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து கிபீர் விமானத்தால் கீழே வீசப்பட்ட வெடிக்காத குண்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதேசவாசியினால் தர்மபுரம் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சக்திவாய்ந்த குண்டு கண்டறியப்பட்டள்ளது.
15 வருடங்களுக்கு முன்னர்
இந்த குண்டு 3 அடி நீளமும், 3 அடி சுற்றுவட்டமும் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் பூமியை நோக்கி வீசப்பட்டுள்ளதாகவும் பூமிக்கு அடியில் அக்குண்டு பதிந்தமையால், இரும்புக்கறல் பிடித்துள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி