வடக்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரம் தமிழ் மக்களுக்கே - சாணக்கியன் பகிரங்கம்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் தமிழ் மக்களிடம் வழங்கப்பட்டால் பாரிய அபிவிருத்திகளை உருவாக்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
வளங்கள் இருந்தும் உரிமை மற்றும் அதிகாரம் இல்லாமையினால் தமிழர்கள் வாழ்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
காலநிலை மாற்றம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை பிரச்சினைகள் தொடர்பில் ரி20 அமைப்பினால் இந்தியாவில் மேகல்யாவில் நடாத்தப்பட்ட செயலமர்வில் இதனை கூறியுள்ளார்.
பாரிய அபிவிருத்திகள்

மேலும், இலங்கை காலநிலை மாற்றம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குவதாக இருந்தால் மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் சிலவற்றில் தாக்கம் செலுத்தினாலும் அதற்கான மாற்று திட்டத்தை கரிசனையில் கொள்வதன் மூலம் நாமும் எதிர்வரும் காலங்களில் காலநிலை மாற்றத்திற்கான ஒத்துழைப்பை வழங்க முடியும்.
மேகல்யா எனப்படும் மாநிலம் 1970ம் களில் உருவாக்கப்படதாகும். இந்த மாநிலம் அங்கு காணப்படும் வளங்களை கொண்டு மிகவும் அபிவிருத்தி அடைந்த இடமாக காணப்படுகின்றது.
இதே போன்று இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு அதற்கான அதிகாரங்களை வழங்குவார்கள் எனில் எம்மாலும் குறிப்பிட்ட சில காலங்களுக்குள் பாரிய அபிவிருத்திகளை உருவாக்க முடியும் என்பதனை எமது நாட்டின் அரசுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம். இதனையே எமது கட்சியான தமிழரசுக் கட்சியும் காலம் காலமாக வலியுறுத்தி வருகின்து.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்