ரத்தினக் கல்லுடன் சிக்கிய பிரதேச சபை உறுப்பினர்: தொடருடம் விசாரணை
50 கோடி மதிப்பு எனக் கூறி உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக ரத்தினக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் உட்பட மூன்று பேரை நுவரெலியா காவல்துறை கைது செய்துள்ளது.
அதை வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறி, மூன்று சந்தேக நபர்களும் ரூ.50 கோடிக்கு விற்கத் தயாராக இருந்த நிலையில், தரகர் மூலம் விலையை ரூ.1 மில்லியனாகக் குறைத்துள்ளனர்.
அதன்படி, தரகரை வைத்து நடத்தப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பில் இந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரத்தினக் கல் தொடர்பில் அறிக்கை
கைது செய்யப்பட்ட 40-50 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்களும் கண்டி - மடவல மற்றும் வத்தேகம பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ரத்தினக் கல் போலியானதா என்பது குறித்து தேசிய ரத்தினக் கல் மற்றும் நகைகள் அதிகாரசபையிடமிருந்து அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 10 மணி நேரம் முன்
