பேர குளத்தில் தள்ளி விடப்பட்ட அரசியல்வாதிகள் - சடலத்தை எடுத்து செல்லும் வண்டியில் வீடுகளுக்கு சென்றதால் பதற்றம்
காலிமுகத் திடலில் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்த கடந்த 9 ஆம் திகதி கொழும்புக்கு வந்ததாக கூறப்படும் பிரதேச சபை உறுப்பினர்கள் மூன்று பேர் மூன்று தினங்களுக்கு பின்னரே வீடுகளுக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் கொழும்பில் தங்கியுள்ளனர். போராட்டகாரர்கள் பதில் தாக்குதல் நடத்தி கொழும்பு பேர குளத்தில் தள்ளி விடப்பட்ட இந்த பிரதேச சபை உறுப்பினர்கள் மூன்று நாட்களுக்கு பின்னர், சடலத்தை எடுத்துச் செல்லும் மலர்ச்சாலைக்கு சொந்தமான வாகனத்தை தயார்படுத்தி வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் மூவரும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதேச சபை ஒன்றின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது.
இவர்கள் மூன்று பேர் உட்பட நால்வர், கடந்த 9 ஆம் திகதி போராட்டகாரர்களிடம் சிக்கியுள்ளதுடன் கடுமையாக தாக்கப்பட்டு பேர குளத்தில் தள்ளி விடப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர், இவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்து விட்டு, மலர்ச் சாலையை நடத்திவரும் நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாகனம் ஒன்றை தயார்படுத்தி வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
மாலை நேரத்தில் மலர்ச் சாலையின் வண்டி வீடுகளுக்கு வந்ததால், பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகளில் இருந்தவர்கள் பதற்றமடைந்துள்ளனர்.
மலர்ச் சாலையின் வண்டி வந்தது பற்றி அயல் வீட்டில் உள்ளவர்கள் விசாரித்த போது சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
