அதிபர் ரணில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்
                                    
                    Ranil Wickremesinghe
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Australia
                
                                                
                    India
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    அதிபர் ரணில் விக்ரமசிங்க நள்ளிரவு 2.00 மணியளவில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை(9) மற்றும் நாளை மறுதினம்(10) இடம்பெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பயணித்துள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் அதிபர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ரணிலின் முக்கிய உரை
இந்த பயணத்தின் போது, அதிபர் ரணில் விக்ரமசிங்க, அவுஸ்திரேலிய பிரதமர், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும், இந்த மாநாட்டில் இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க முக்கிய உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        