விவசாயிகளுக்கு உரமானியம்! வெளியான மகிழ்ச்சித் தகவல்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Ministry of Agriculture
Namal Karunarathne
By Dilakshan
உர மானியம் தொடர்பான அனைத்து கொடுப்பனவுகளும் அடுத்த சில நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன நேற்று (05) நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, உர மானியம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நிதிகளும் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பேரிடர் சூழ்நிலை
சமீபத்திய பேரிடர் சூழ்நிலை காரணமாக, உர மானியம் தொடர்பான நிதிகளை வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாகவும், அடுத்த சில நாட்களில் அது மீண்டும் வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரட்ண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதி் அமைச்சர் நாமல் கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
2 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி