போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் சுற்றிவளைப்பு! பெண்ணொருவர் அதிரடி கைது

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Foreign Employment Bureau
By Dhilak Feb 05, 2026 04:27 PM GMT
Report

மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றைப் பேணி வந்து, டுபாய், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக நபர்களைச் சேர்த்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் காவல்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளினால் கடந்த 03 ஆம் திகதி இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, முல்லேரியாவ பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீடொன்றில் இயங்கி வந்த இந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டது.

ஆசியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இரண்டாவது இடம்பிடித்த இலங்கையின் பிரதேசம்

ஆசியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இரண்டாவது இடம்பிடித்த இலங்கையின் பிரதேசம்


கைப்பற்றப்பட்ட கோப்புகள் 

இதன்போது, குறித்த நிறுவனத்தை நடத்தி வந்த உடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் சுற்றிவளைப்பு! பெண்ணொருவர் அதிரடி கைது | Woman Arrested Fraud Foreign Employment Agency

அவரிடமிருந்து 154 கடவுச்சீட்டுகள், வேலை ஒப்பந்தங்கள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் வேலை கோரும் விண்ணப்பங்கள், பல்வேறு நபர்களின் சுயவிபரக் கோவைகள் அடங்கிய கோப்புகள் என்பன அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பெண் இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில் பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமத்தைப் பெற்று வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடத்தியுள்ளார்.

11 வழக்குகள் தாக்கல்

எனினும், அவருக்கு எதிராகப் பணியகத்திற்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய 11 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவரது உரிமம் இடைநிறுத்தப்பட்டிருந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் சுற்றிவளைப்பு! பெண்ணொருவர் அதிரடி கைது | Woman Arrested Fraud Foreign Employment Agency

அத்துடன், இந்தப் பெண்ணிற்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட பெண் நேற்று (04) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து, இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதிகரிக்கும் வாகன இறக்குமதி : பதிவு செய்யப்படும் இலட்சக்கணக்கான வாகனங்கள்

அதிகரிக்கும் வாகன இறக்குமதி : பதிவு செய்யப்படும் இலட்சக்கணக்கான வாகனங்கள்

மணலாறு பிரதேச செயலக சர்ச்சை! விசாரணை நடத்த உபாலி சமரசிங்க கோரிக்கை

மணலாறு பிரதேச செயலக சர்ச்சை! விசாரணை நடத்த உபாலி சமரசிங்க கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019