ரஷ்யப் போர்க்கப்பல் மீது உக்ரைன் நடத்திய பயங்கர தாக்குதல்: உறுதிப்படுத்திய ஜெலென்ஸ்கி

Volodymyr Zelenskyy Ukraine World Russia
By Shalini Balachandran Nov 23, 2026 11:12 AM GMT
Report

லிபியாவின் பெங்காசி (Benghazi) கடற்படைத் தளத்தில் நங்கூரமிட்டிருந்த ரஷ்யக் கடற்படையின் மெர்குரி (Merkury) என்ற போர்க்கப்பல் மீது உக்ரைன் கடல்வழி ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏழு கடல்வழி ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்பட்ட பலாலி வீதி : வெளியான முக்கிய அறிவிப்பு

யாழில் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்பட்ட பலாலி வீதி : வெளியான முக்கிய அறிவிப்பு

ரஷ்யப் போர்க்கப்பல்

இந்தநிலையில் குறித்த நடவடிக்கையின் போது குறித்த ரஷ்யப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாகவும் இதனை ஒரு முன்மாதிரியான இராணுவ நடவடிக்கையாகத் தாம் கருதுவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் மெர்குரி போர்க்கப்பல் தீப்பிடித்துக் கவிழ்ந்து மூழ்கியுள்ளதைச் செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இத்தாக்குதலின் போது கப்பலிலிருந்த Ka-27 ரக இராணுவ ஹெலிகொப்டர் ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளதுடன் ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்காக ரஷ்யா பயன்படுத்திய எம்.வி. அங்காரா (MV Angara) என்ற சரக்குக் கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் எரிபொருள் மற்றும் விநியோகங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே குறித்த ரஷ்யக் கப்பல் பெங்காசி துறைமுகத்திற்கு வந்திருந்ததாகக் கிழக்கு லிபிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிங்கராஜ வனத்தில் கை வரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகளுக்கு 7 கோடியே 64 இலட்சம் அபராதம்

சிங்கராஜ வனத்தில் கை வரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகளுக்கு 7 கோடியே 64 இலட்சம் அபராதம்

கூட்டு விசாரணை

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ரஷ்யாவுடன் இணைந்து கூட்டு விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ள கிழக்கு லிபிய அரசாங்கம், இந்தத் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

பெங்காசி துறைமுகத்தில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைப் பயங்கரவாதச் செயல் எனக் கண்டித்துள்ள லிபியாவிற்கான ரஷ்யத் தூதர் ஐடார் அகானின் (Aidar Aganin), இதற்குப் பதிலடி கொடுப்பது குறித்து மொஸ்கோ ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் போர்க்கப்பல் மீது உக்ரைன் நடத்திய பயங்கர தாக்குதல்: உறுதிப்படுத்திய ஜெலென்ஸ்கி | Ukraine Sinks Russian Warship In Libya Port

இச்சம்பவத்தில் ரஷ்ய மற்றும் லிபியப் பணியாளர்கள் உட்படப் பத்துப் பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய - உக்ரைன் போர் ஐரோப்பியப் பிராந்தியத்தையும் தாண்டி ஆபிரிக்கக் கடற்பரப்பு வரை விரிவடைந்துள்ள நிலையில் தமது நாட்டை வெளிநாட்டு மோதல்களுக்கான போர்க்களமாக மாற்ற வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையின் லிபியாவிற்கான பணிக்குழு (UNSMIL) வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கடல் முற்றுகைக்கு எதிராக இராணுவ நடவடிக்கை: ஈரானின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் கடல் முற்றுகைக்கு எதிராக இராணுவ நடவடிக்கை: ஈரானின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023