அனோஜனின் விவகார வழியில் திருச்சி முகாமில் தடுத்துவைக்கப்பட்ட நபருக்காக களமிறங்கும் பைசர் எம்.பி
சவூதி அரேபியாவின் மரண தண்டனையிலிருந்து சிவராஜா அனோஜனை விடுவிப்பதற்காக செயற்பட்டது போன்று இந்தியாவின் திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நுவரெலியாவினைச் சேர்ந்த யாசீர் மௌலவியின் விடுதலைக்காக களமிறங்கவுள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுல்லா அமைச்சர் விஜித ஹேரத்துடன் பேச்சு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து சென்னையிலுள்ள பிரதி இலங்கை உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடியதாகவும் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி தமிழகம் செல்லவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்
யாசீர் மௌலவி
விஜயத்தின் போது சந்திக்க வேண்டிய முக்கியஸ்தர்களுடான சந்திப்புக்களுக்கான ஏற்பாடுகளை சென்னையிலுள்ள பிரதி இலங்கை உயர் ஸ்தானிகர் முன்னெடுத்து வருகிறது.

இறைவனின் உதவியுடன் யாசீர் மௌலவியினை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு என்னால் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் இலவசமாக மேற்கொள்வேன் என பைசர் எம்.பி கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |