கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக நினைவாலயம் திறந்து வைப்பு!
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Pavi
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக, மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவிடம் நேற்று (22.11.2026) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நினைவாலயம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை : இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்து செல்லவுள்ள திருமாவளவன்
ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு
இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இந்த நினைவாலயம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, தமிழ் மக்கள் அனைவரும் நினைவாலயத்திற்கு வருகை தந்து, மாவீரர்களுக்கு மலர்வணக்கம் மற்றும் அகவணக்கம் செலுத்துமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |