அமெரிக்க மோதலுக்கு மத்தியில் புதிய ஏவுகணைத் தளத்தை அறிமுகப்படுத்திய ஈரான்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை , ஒரு புதிய ஏவுகணைத் தளத்தையும் இரண்டு ஏவுகணைகளை ஏவும் அமைப்பையும் அறிமுகப்படுத்தியதாக, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.ஆர்.ஜி.சி-யின் தலைமைத் தளபதி அஹ்மத் வாஹிதி மற்றும் அதன் விண்வெளிப் பிரிவின் தலைமைத் தளபதி சையத் மஜித் மூசாவி ஆகியோரினால், தளமும் புதிய ஏவுகணை செலுத்தியும் திறந்து வைக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஈரான் தரப்பில் வெளியாகிய செய்தியின்படி, இந்தத் தளத்தில் IRGC-இன் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய தலைமுறை ஏவுகணைகள் உள்ளன.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை
உலகளாவிய இருப்பிட கண்டறிதல்
இவை அதிக தூரம் பாயும் திறன் மற்றும் மிகத் துல்லியமான இலக்குத் திறனைக் கொண்டிருப்பதுடன், உலகளாவிய இருப்பிடக் கண்டறிதல் அமைப்பிலிருந்து சுயாதீனமாக இயங்கும், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அமைப்புகள் மூலம் வழிநடத்தப்படவும் கூடியவை.

புதிய ஏவுகணை செலுத்தியானது ஒரே நேரத்தில் இரண்டு திரவ எரிபொருள் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்திய இரண்டு போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐ.ஆர்.ஜி.சி-யின் விண்வெளிப் பிரிவின் திறன்கள் விரிவடைந்துள்ளதாகவும், மேலும் அந்த அமைப்பு "அச்சுறுத்துவதற்கும் தடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட வியப்பூட்டும் மற்றும் மிகவும் பயனுள்ள தயாரிப்புகளை" உருவாக்கியுள்ளது என்றும் மூசாவி கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |