ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை

chemmani mass graves jaffna Presidents
By Dharu Nov 22, 2026 07:31 AM GMT
Report

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் செம்மணி மனித புதைகுழியை அண்மித்த பகுதிகளை தவிர உடல்கள் புதைக்கப்பட்ட ஏனைய பகுதிகளை தன்னால் அடையாளம் காண்பிக்க முடியும் என குற்றப்புலனாய்வுப்பிரிவிடம் மரணதண்டனை அனுபவித்துவரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டவரும், செம்மணி மனிதப்புதைகுழி பற்றிய உண்மைகளை முதன்முதலில் வெளிப்படுத்தியவருமான சோமரத்ன ராஜபக்ச இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

செம்மணிப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவவின் அறிக்கை : நீதி அமைச்சரின் அறிவிப்பு

செம்மணிப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவவின் அறிக்கை : நீதி அமைச்சரின் அறிவிப்பு

சோமரத்ன ராஜபக்ச அறிக்கை

இந்த விசாரணையின் போது, செம்மணியை அண்மித்த மயானப் பகுதியில் ஏனையோரிடம் கூறி, அவர்கள் மூலம் உடல்களைப் புதைத்தமையினால் தன்னால் அவற்றை அடையாளம் காண்பிக்க முடியாது என்றும், உடல்கள் புதைக்கப்பட்ட ஏனைய பகுதிகளை அடையாளம் காண்பிக்க முடியும் என்றும் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி தன்னிடம் வாக்குமூலம் பெறுவதற்கு வருகைதந்திருந்த குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை | Request Somaratne Rajapaksa Presidential Pardon

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் மரணதண்டனைக்கைதியான சோமரத்ன ராஜபக்சவை சென்று சந்தித்த குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் குழுவினர், அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்தனர்.

இந்நிலையில் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியபோது 'மயானத்தில் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளையும், உடல்கள் புதைக்கப்பட்ட ஏனைய இடங்களையும் வெவ்வேறாக அடையாளம் காண்பிக்க முடியுமா?' என்று அவர்கள் கேட்டதாகவும், அதற்கு 'மயானத்தில் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளை வேறாக அடையாளம் காண்பிக்க முடியாது. இருப்பினும் மயானத்தில் உடல்கள் புதைக்கப்பட்டன.

அதேபோன்று படையினரால் உடல்கள் புதைக்கப்பட்டன என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மயானப் பகுதியில் ஏனையோரிடம் கூறி, அவர்கள் மூலம் உடல்களைப் புதைத்தமையினால் என்னால் அவற்றை அடையாளம் காண்பிக்க முடியாது.

உடல்கள் புதைக்கப்பட்ட ஏனைய பகுதிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்' என்று பதிலளித்ததாகவும் சோமரத்ன ராஜபக்ச அவரது குடும்பத்தார் மூலம் மீளுறுதிப்படுத்தியுள்ளார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு

அதனையடுத்து 'ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் தான் அந்த இடங்களை அடையாளம் காட்டுவீர்களா?' என குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் வினவியதாகவும், அதற்கு 'ஆம், ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் அல்லது இவ்வழக்கு மீண்டும் முழுமையான விசாரணைக்காகக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டால் தான் அவற்றைக் காண்பிப்பேன்' என்று பதிலளித்ததாகவும் சோமரத்ன தெரிவித்துள்ளார்.

அதேபோன்று 'விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாக நான் கூறவில்லை.

மாறாக விடுதலைப்புலிகள் எனப் படையினரால் சந்தேகிக்கப்பட்டவர்கள் மற்றும் சாதாரண மக்களின் உடல்களே புதைக்கப்பட்டதாகவும், அவர்களின் உடல்களே புதைப்பதற்காக எம்மிடம் கொண்டுவந்து தரப்பட்டதாகவுமே நான் கூறினேன்.

நான் மயானத்துக்கு அப்பாற்பட்ட இடங்களிலேயே உடல்களைப் புதைத்தமையினால், மயானத்தில் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளை என்னால் அடையாளம் காண்பிக்க முடியாது என்றே கூறினேன்' எனவும் சோமரத்ன ராஜபக்ச அவரது குடும்பத்தார் ஊடாக தெளிவுபடுத்தியுள்ளார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026