பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் புத்தாண்டுக்குப் பிறகு புதிய தாக்குதல்கள்..! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், புத்தாண்டுக்குப் பின்னர் அந்நாட்டின் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அவற்றில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல்கள் தொடர்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை மீற முயற்சிக்கும் ஈரானியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவற்றை மூழ்கடிக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்குப் பிராந்தியம்
இதேவேளை, ஈரானில் மீண்டும் தீவிரமடைந்துள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு அந்நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |