கொழும்பில் பயங்கரம்: காயங்களுடன் ஆணின் சடலத்தை வீசிவிட்டு சென்ற இனந்தெரியாதவர்கள்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Jaso
கொழும்பு 3, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (21) இரவு முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இந்த சடலத்தை அந்த இடத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம்
இருப்பினும், உயிரிழந்தவரின் அடையாளம் அல்லது மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் கொழும்பு 3 காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சடலத்தை அந்த இடத்திற்குக் கொண்டு வந்த நபர்களை அடையாளம் காணும் விசாரணைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |