மொட்டு கட்சி அதிரடி - கோட்டாபய மற்றும் ரணில் பதவி விலகுமாறு தீர்மானம்
SLPP
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
By Sumithiran
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளுகைக்குட்பட்ட பண்டாரகம பிரதேச சபையில் அரச தலைவர் மற்றும் பிரதமர் பதவி விலகி சர்வ கட்சி அரசை அமைக்க வலியுறுத்தியும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விசேட பிரேரணை
பிரதேச சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய விசேட பிரேரணையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ருவன் பி பெரேரா அவைத் தலைவர் தேவேந்திர பெரேராவிடம் கையளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மகேஷ் கொத்தலாவல மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி உறுப்பினர்.
பொதுஜன பெரமுன
பண்டாரகம பிரதேச சபையில் பொதுஜன பெரமுனவின் தலைவர் உட்பட 18 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 ஆசனங்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 3 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 2 ஆசனங்களும் உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் 7 எம்.பி.க்கள் பிரசன்னமாகியிருந்ததுடன், காமினி சரச்சந்திர, அகில பீரிஸ், தயானந்தனி பெரேரா மற்றும் பலர் கலந்து கொள்ளவில்லை.
பிரேரணைக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தர்ஷன பீரிஸ் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி