சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும்(anura kumara dissanayake) சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கும் (xi jinping)இடையிலான சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு சீன நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமானது.
உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அநு குமார திஸநாயக்கவின் சீன விஜயத்தின்போது முக்கிய 07 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக ஜனாதிபதி அநுர குமார சீன ஸ்தாபக தலைவர் மா ஓ சேதுங் நினைவிடத்தில் தனது அஞ்சலியை செலுத்தியிருந்தார்.
President @anuradisanayake , on a state visit to China at the invitation of President Xi Jinping, held discussions at the Great Hall of the People. The talks centred on enhancing bilateral ties and exploring potential future investments. #SriLanka #China 🇱🇰🤝🇱🇰 pic.twitter.com/HNADeu0JHV
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) January 15, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |