நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரவின் செய்தி
பொதுத் தேர்தலில் மகத்தான தேர்தல் வெற்றிக்காக வாக்களித்த நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நன்றி தெரிவித்துள்ளார்.
“மறுமலர்ச்சி சகாப்தத்தை ஆரம்பிப்பதற்கான பொறுப்பை சுமந்த அனைவருக்கும் நன்றி!” என ஜனாதிபதி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பட்டியல்
நடைபெற்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி (National People's Power) புதிய நாடாளுமன்றத்தை அமைக்கவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில், தேசிய பட்டியல் ஊடாக 18 ஆசனங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தை சுத்தம் செய்து புதியவர்களை நாடாளுமன்றம் கொண்டு செல்வது தேசிய மக்கள் சக்தியின் கடமை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |