ஜனாதிபதி அநுர, இந்தியாவிற்கு அளித்த உறுதிமொழி
இலங்கையின்(sri lanka) நிலம் அல்லது கடல்சார் பிரதேசம் இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (anura kumara dissanayake)மீண்டும் ஒருமுறை உறுதியளித்ததாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கைத் தலைவர்களுக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவித்த மிஸ்ரி, அத்தகைய உறுதிமொழி இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கையொப்பம் அல்லது பின்னணி என்று குறிப்பிட்டார்.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு
ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் கட்டமைக்கும் குடை கட்டமைப்பு ஆவணம் இது என்றும் அவர் கூறினார்.
இது உயர் மட்ட பரிமாற்றங்கள், திறன் மேம்பாடு மற்றும் கூட்டுப் பயிற்சிகள் போன்றவற்றை தீவிரப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
