அநுரவின் இந்திய விஜயம்!! ஆட்டம் காணப் போகும் கடந்த கால கொள்கைகள்
அநுர அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது போகும் போது முந்தைய ஆட்சியாளர்களின் நிலை அவர்களுக்கும் ஏற்படலாம் என அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐ.பி.சியின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்தியா (India), அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை எவ்வாறு சமநிலையில் சமதூரத்தில் வைத்து கையாளப் போகிறார்கள் என்பதிலும் அரசின் எதிர்காலம் தங்கி உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் அதிகமான வாக்குகளை பெற்று தற்போது ஆட்சி அமைத்துள்ளது. அரசாங்கம் மக்களுக்கு அளவிற்கதிகமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளதுடம் அவற்றை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த விடயம் தொடர்பாக அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகிறது இன்றைய களம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |