இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி - கோட்டாபய எடுத்துள்ள முடிவு
srilanka
decision
gotabaya
economic crisis
By Sumithiran
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை நாளாந்தம் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக சந்தையில் எரிவாயு , பால்மா மற்றும் டீசல் இல்லை.நாளாந்தம் அமுல்படுத்தப்படும் தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் நாளாந்தம் சந்தையில் அதிகரித்துச் செல்லும் விலைவாசி உயர்வுகள் காரணமாக மக்கள் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
வரும் 23ம் திகதி மாநாட்டை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று மாலை முதல் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி