அதிபர் தெரிவில் விலைபோன எம்.பி..! கூட்டமைப்பினுள் வெடித்தது உட்பூசல்
சிறிலங்கா அதிபர் தெரிவு
சிறிலங்கா அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவளித்ததான செய்திகள் கூட்டமைப்பிற்குள் பிளவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் ஆகியோர் ஒன்றாக இருக்கும் நிழற்படத்துடன், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை போயுள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்த கருத்தை உள்ளடக்கிய பேஸ்புக் பயனர் ஒருவரின் பதிவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிர்ந்துள்ளார்.
சுமந்திரனின் மறைமுக கருத்து
இதன்மூலம் சக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், விலைபோயுள்ளார் என எம்.ஏ.சுமந்திரன் மறைமுகமாக கருத்து வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சகரான யதீந்திரா எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
அத்துடன் தமிழர் நலன்சார்ந்த விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால முன்நகர்வுகளை இவ்வாறான உட்பூசல்கள் பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

