தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு : அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!
Sri Lanka
Sri Lanka Cabinet
Election
By Eunice Ruth
இலங்கையில் இந்த வருடம் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள்
இந்த நிதி ஒதுக்கீட்டிற்குள் அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான செலவுகளை நிர்வகிப்பது குறித்தும் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை அடுத்த வருடத்தில் நடத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்கள்
இதேவேளை, உரிய தேர்தல் சட்டங்களுக்கான திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி