வெளிவிவகார அமைச்சின் கோரிக்கை -அடியோடு நிராகரித்தது அதிபர் அலுவலகம்
நான்கு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் சேவைகளை நீடிக்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையை அதிபர் அலுவலகம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சேவை நீடிப்பு கோரியவர்களில் ஒருவர் ஏற்கனவே தனது ஓய்வு திகதியை முடித்துவிட்டார், மேலும் நான்கு பேர் அடுத்த ஆண்டுக்குள் ஓய்வுபெறும் வயதை எட்டுவார்கள்.
சேவை நீடிப்பு
எனினும், தங்களது பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அரச சேவை ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற அரசின் கொள்கையை பின்பற்றி, இந்த அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெல்ஜியம், ஓமான், போலந்து, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஆகியோரின் சேவை நீடிப்பே நிராகரிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
