அதிபர் செயலகத்திற்குள் புகுந்தவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கோட்டையில் அமைந்துள்ள அதிபர் செயலகத்திற்குள் பிரவேசிக்க முயன்ற சந்தேக நபர்கள் மற்றும் சொத்துக்களை திருடிய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 46 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே அடங்குவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவில் இரண்டு பிக்குகளும் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பிக்குகள் உட்பட 46 பேர் கைது
காலிமுகத்திடலில் ஆரம்பித்த அரச எதிர்ப்பு போராட்டம் பின்னர் மக்கள் புரட்சியாக உருவெடுத்த நிலையில் கொழும்பில் உள்ள அதிபர் செயலகம் உள்ளிட்ட முக்கிய அரச அலுவலகங்களுக்குள் போராட்டகாரர்கள் செல்லும் அளவிற்கு நிலைமை கட்டு மீறி சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மக்கள் புரட்சியின் காரணமாகவே தற்போது அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்கும் நிலைக்கு வந்துள்ளமையும் சுட்டிகாட்டத்தக்கது.
மக்கள் புரட்சி
எனினும் பதவிக்கு வந்த பின்னர் அவர் போராட்டகாரர்களை கைது செய்வதற்கு காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா
