மொசாட்டின் வழிகாட்டலில் தமிழ் முஸ்லிம் உறவுகளை சிதைத்தெறிந்த புலனாய்வாளர்கள்
காத்தான்குடி படுகொலை இடம்பெற்று 35 வருடங்கள் கடந்தும் நீதி பெறப்படவில்லை. இதில் கொல்லப்படவர்கள் தமிழ் மக்களா முஸ்முஸ்லிம் மக்களா என்பதை கடந்து அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் தான் காத்தான்குடி படுகொலையை செய்தார்கள் என முஸ்லிம் தரப்புகள் சொல்லிக்கொண்டாலும் அந்த கருத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. இந்த நிலையில் காத்தான்குடிப் படுகொலையின் பின்னணியிலுள்ள சதிகள் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்த விவகாரம் ஒரு புலனாய்வுச் சதியாக கூட இருக்கலாம். தமிழ் பேசுகின்ற சமூகங்களுக்கு இடையில் பிளவு ஏற்படுத்துகின்ற அணுகுமுறைகளை மொசாட்டினுடைய புலனாய்வு திட்டங்களினூடாக சிறிலங்காவின் புலனாய்வு அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டதாக நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கிலே பிட்டும் தேங்காய்ப்பூவும் போல் இருந்த முஸ்லிம் தமிழ் உறவுகள் இடையே பிளவை ஏற்படுத்தி அதன் மூலமாக இனக்கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய்கின்ற நடவடிக்கையை சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவு கடந்த காலங்களில் மேற்கொண்டதாக பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் அதிர்வு நிகழ்ச்சியில் காண்க......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா
