களுத்துறை ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினரால் இடையூறு – சாலிய பீரிஸ் கண்டனம்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைப்பயணமாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டகாரர்களுக்கு எதிராக காவல்துறையினரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து களுத்துறையில் இருந்து கொழும்புக்கு நடைப்பயணமாக வந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இரு பெண்களையும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பொதுமக்களையும் காவல்துறையினர் கைது செய்யுள்ளனர்.
மேலும், இதன்போது வாதுவ, பாணந்துறை ஆகிய இடங்களில் பேரணியை தடுத்த காவல்துறையினர், கொரகபொல பிரதேசத்தில் வைத்து இவர்களை கைது செய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கழுத்தை பிடித்து தள்ளுதல்
இதன்போது சிரேஷ்ட காவல்துறையினர் உத்தியோகத்தர் ஒருவர், பெண் காவல்துறையினர் இருவரை கழுத்தை பிடித்து தள்ளுவது தொடர்பான காணொளிகள் சமூகஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில். குறித்த சம்பவத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் பேரவையின் அமைப்பாளர் பூஜ்ய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது.
