இலங்கைக்கு சீனாவினால் கையளிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண உபகரணங்கள்
இலங்கைக்கு (Sri Lanka) ரூபாய் 400 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அனர்த்த நிவாரண உபகரணங்களை சீனா (China) நன்கொடையாக வழங்கியுள்ளது.
குறித்த உபகரணங்கள் இன்று (5) கொழும்பில் உள்ள அனைத்து முகாமைத்துவ நிலையத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
சீனத் தூதுவர் கீ ஸென்ஹொங் இந்த உதவியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவிடம் வழங்கியுள்ளார்.
நிவாரண சேவைகள்
பத்து மில்லியன் யுவான் மதிப்புள்ள இந்த நன்கொடையில் கூடாரங்கள், படகுகள், படுக்கைகள், உயிர் காப்பு அங்கிகள், சமையலறை பெட்டிகள், வெள்ளக் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தால் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் இந்த உபகரணங்கள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களை நிவர்த்தி செய்வதில் சர்வதேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சீனா சரியான நேரத்தில் ஆதரவளித்ததற்காக பாதுகாப்புச் செயலாளர் இதன்போது நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
