கூடுதல் வரிகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ஈரானிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களையோ அல்லது சேவைகளையோ வாங்கும், இறக்குமதி செய்யும் அல்லது வேறுவிதமாகப் பெற்று அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் எந்தவொரு நாடும் இந்த உத்தரவில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த உத்தரவு விதிக்கப்படும் விகிதங்கள் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அது சுமார் 25% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி உத்தரவு
இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நலன்களை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக கூறப்படுகிறது.

உத்தரவு உடனடியாக அனைத்து நாடுகளுக்கும் வரி விதிப்பதை கட்டாயப்படுத்தவில்லை. இருப்பினும், சம்பந்தப்பட்ட அமெரிக்க அமைச்சகங்கள் ஆய்வு மேற்கொண்டு, தேவையான நாடுகள் மீது கூடுதல் வரி நடவடிக்கைகளை எடுக்க இந்த உத்தரவு வழிவகுக்கிறது.
இந்த முடிவு, உலக வர்த்தகத்தில் புதிய பதற்றங்களை உருவாக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஈரானுடன் வணிக தொடர்புகளை வைத்துள்ள நாடுகளின் அமெரிக்க வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |