எஸ். ஜெய்சங்கரை சந்தித்த ரில்வின் சில்வா
Dr. S. Jaishankar
Sri Lanka
India
By Thulsi
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
"இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின்" (ICCR) அழைப்பின் பேரில் ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் நேற்று (05) காலை புதுடில்லிக்கு சென்றிருந்தனர் .
இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது பேச்சு நடத்தப்பட்டது.

டித்வா புயலின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு ரில்வின் சில்வா நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கான தமது நாட்டு ஆதரவை இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தினார். இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியாவின் உதவிகள் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி