அதிபர் ரணில் திக் விஜயம்..!
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
அதிபர் ரணில் விக்ரமசிங்க காலி கொக்கல மற்றும் அஹங்கம ஆகிய இடங்களில் பல சுற்றுலா விடுதிகளுக்கு சென்று திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
எவருக்கும் முன்கூட்டியே அறிவிக்காமல் நேற்று முன்தினம் காலை அதிபர் திடீரென விடுதிகளுக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற அதிபர் சுற்றுலா விடுதி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு
சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிபரின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுவரப்பட்டது.
இங்கு தங்கியிருந்த சில வெளிநாட்டவர்களுடனும் அதிபர் சிநேகபூர்வமாக உரையாடியுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி