அதிபர் ரணிலின் கடுமையான உத்தரவு
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Jaso
அரச செலவுகளை கட்டுப்படுத்தல்
நாடு முகம் கொடுத்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் அரச செலவுகளை கட்டுப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க இறுக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதனையடுத்து அரச செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு, அதிபரின் செயலாளர் அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டது
இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றும் சகல அமைச்சுகளினதும் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிபரின் ஆலோசனைக்கமையவே இந்த சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் திறைசேரியின் சுற்றுநிருபத்தை கடுமையாக பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.